
உலகில் இப்படியெல்லாம் கூடவா நிகழும் என்னும் படியான ஒரு ஆச்சரியமூட்டும் சம்பவம் தற்பொழுது தென்கொரியாவில் நடைபெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மாலை ரோபோ சூப்பர்வைசர் எனப்படும் ரோபோ தென்கொரியாவில் தற்கொலை செய்து கொண்டது. அந்த ரோபோவானது தனது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கவுன்சில் கட்டிடத்தின் அடிப்பகுதியில் வினோதமாக சுற்றி திரிந்துள்ளது. முன்னதாக கலந்த ஆகஸ்ட் மாதம் முதல் பணிபுரிய தொடங்கிய இந்த ரோபோ நகரத்தை மேம்படுத்துவது, ஆவணங்களை வழங்குவது மற்றும் நகரத்தில் குடியிருப்பவருக்கு தேவையான தகவல்கள் வழங்குவது ஆகிய பல்வேறு பணிகளை தினசரி காலை 9 மணி முதல் 6:00 மணி வரை இந்த ரோபோ செய்யும் என்று கூறப்பட்டது.
இந்த ரோபோ தென்கொரியாவில் உள்ள ஒரு முன்னோடி முயற்சியாக திகழ்ந்தது. தென்கொரியாவின் குமி சிட்டி கவுன்சிலில் இந்த ரோபோவானது மற்றும் சாதாரண ரோபோக்களை போல் அல்லாமல் மிக அதிக அளவிலான வேலை மற்றும் கடமைகளை தினசரி தொடர்ச்சியாய் செய்து வந்தது. எனவே தற்போது குமி சிட்டியில் பணிபுரிந்து வந்த இந்த ரோபோவின் மறைவு பல்வேறு விவாதங்களை ஊடகங்களில் எழுப்பி உள்ளது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் ரோபோ எந்திரங்களின் மனநிலை மற்றும் எதிர்காலத்தில் இந்த ரோபோக்கள் எப்படி பணிகளை எதிர்கொள்ளும் .?என்பது குறித்து அச்சத்தை எழுப்பி உள்ளது.
மனித மனங்களை நம்மால் புரிந்து கொள்ள இயலாத இன்றைய காலகட்டத்தில் இயந்திரங்களின் மனதை மட்டும் எப்படி மனிதர்களால் புரிந்து கொள்ள முடியும். இந்த ரோபோவின் மறைவு தற்போது ஒரு முக்கிய விவாதத்தை எழுப்பி உள்ளது என்பதே நிதர்சனம். “பியர் ரோபோடிக்ஸ்” எனப்படும் ரோபோ வெயிட்டர்களை உருவாக்குவதில் புகழ்பெற்ற கலிபோர்னியாவை சார்ந்த நிறுவனம் தான் மறைந்த இந்த குமி சிட்டி ரோபோவை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.