லட்சுமி தேவியின் அருள் வேண்டுமா?.. மறந்தும் கூட இந்த தவறுகளை செய்ய வேண்டாம்..!!

லட்சுமி தேவியின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரும் பல வழிகளை செய்கின்றனர். ஆனால் இதில் பல தவறுகளை நாம் நமக்கே தெரியாமல் செய்கின்றோம். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

லட்சுமி தேவி

நமது வீட்டின் பூஜை அறையை எப்போதும் சுத்தமாகவும் பூக்களின் வாசம் நிறைந்ததாகவும் வைத்திருப்பது அவசியம். அப்போது தான் லட்சுமி தேவி அங்கே குடியிருப்பாள். வீட்டின் நேர்கோட்டில் மூன்று கதவுகள் இருக்க கூடாது.

இப்படி இருந்தால் நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்காது. வாஸ்த்துப்படி இந்த கதவுகளின் வழியாக சம்பாதித்த பணம் அப்படியே வெளியே செல்லும் என கூறப்படுகின்றது.

வீட்டின் பிரதான வழியில் எப்போதும் காற்றழுத்தம் சத்தம் ஒலி என்பவை தொங்கும் விதமாக இருக்க வேண்டும். படிக்கட்டுகள் வைக்கும் போது கதவின் இரண்டு மூலைகளிலும், நடுவிலும் வைக்கப்பட வேண்டும்.

பிரதான வழியை மூடி வைத்து, யாராவது வரும்போது மட்டும் திறக்க வேண்டும். சீட்டில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நேரத்தை காட்டும் சுவர் கடிகாரம் எப்போதும் சுத்தமாக இருப்பது அவசியம்.

இதனால் நேர்மறை ஆற்றல் வீட்டில் தங்கி இருக்கும். வீட்டின் சுவரில் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயம் சிலந்தி வலைகள் இருப்பதை சுத்தப்படுத்த வேண்டும். இதனால் நிதி பற்றாக்குறையும் நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.

சூரிய அஸ்தமனத்தின் போது வீட்டில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் லட்சுமி தேவியை அவமதிப்பது போல் ஆகிவிடும். இது லட்சுமி தேவிக்கு கோபத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, வீட்டில் வறுமை அதிகரிக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

தினமும் மாலையில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி அதில் இரண்டு கிராம்பு வைக்க வேண்டும். இந்த விளக்கை கதவின் இருபுறமும் வைக்க வேண்டும். இப்படி செய்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.

தினமும் வீட்டில் கற்பூரம் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் மணம் வீசும். இதன் மூலம் லட்சுமி தேவியின் அருளும் கிடைக்கும். இதனால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் வருமானமும் பொங்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த விஷயங்களை நாம் செய்யும் போது வீட்டில் லட்சுமி தேவியின் அருள் கண்டிப்பாக கிடைப்பதோடு செல்வமும் விடு தேடி வரும் இதனால் நோய் நொடிகளும் அண்டாது.

Read Previous

IOCL ஆணையத்தில் Junior Attendant வேலை..!! 240+ காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!!

Read Next

ஆசாரம் பார்க்கிறவன் காசிக்குப் போன கதை..!! அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular