தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாதிக்கா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லப்பர் பந்து திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளி பதிவு செய்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் தினேஷ் கார்த்திக்கும், ஹரிஷ் கல்யாணும் ஈகோவால் மோதிக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் கொஞ்சம் சீக்கிரமாக இந்த இடத்துக்கு வந்துட்டேன். ஆனா இன்னைக்கு இல்லனாலும் 2027, 2028 வருஷத்துலயாவது சினிமால இந்த இடத்துக்கு வந்திருப்பேன்.
சென்னையில் இருந்து இங்க வரதுக்கு எனக்கு 5 1/2 மணி நேரம் ஆயிருக்கும். ஆனா சிவகார்த்திகேயன் கூட வந்ததனால ஒரு 3 மணி நேரத்துல இங்க வந்துட்டேன். பஸ்ல ஃபுட்போர்டு அடிச்சிட்டு வர வேண்டிய ஒருத்தனை கார்ல சொகுசா கூட்டிட்டு வந்தா எவ்வளவு சௌகரியமா பீல் ஆகுமோ, அந்த மாதிரி சிவகார்த்திகேயன் பண்ணாரு. சிவகார்த்திகேயன் அருண் ராஜாவுக்கு போன் பண்ணி ஒரு ஒரு மணி நேரம் படத்தை பத்தி பேசி இருக்காரு.
அருண் ராஜா எனக்கு போன் பண்ணி சிவகார்த்திகேயன் ரொம்ப எமோஷனலா பேசினாரு அப்படின்னு சொன்னாரு. நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. நாங்க படம் பார்த்துட்டு ரொம்ப பெருசா அது வெளிகாட்டிகவில்லை. அடுத்த கட்ட வேலையை பார்க்கலாம். என்ன செய்யலாம்னு யோசிச்சோம். அப்பதான் சிவகார்த்திகேயன் அருண் ராஜாவுக்கு போன் பண்ணி பேசி படத்தை பாராட்டி இருக்காரு என தமிழரசன் பச்சமுத்து கூறியுள்ளார்.