லப்பர் பந்து திரைப்படம் எனக்கு ஸ்பெஷல்.. அதுக்கு காரணம்..!! படக்குழுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!!

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாதிக்கா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லப்பர் பந்து திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளி பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, திரைப்படம் எடுப்பது என்பது சீரியசான விஷயம். அதில் நிறைய கடின உழைப்பும், கிரியேட்டிவிட்டியும் உள்ளது. பாசிட்டிவ் அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மிகக் குறைந்த நெகட்டிவ் விஷயங்களை மட்டுமே நான் பேசுவேன். ஆனால் பல வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்படத்தை ரசித்தேன்.

கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்டு உருவாகும் தமிழ் திரைப்படங்கள் பெரும்பாலும் மையப்புள்ளியில் இருந்து விலகி தான் சொல்ல விரும்புவதை தெரிவிக்க முனைகின்றன. அதனால் தான் லப்பர் பந்து எனக்கு விசேஷமான படமாக தெரிகிறது. மிகவும் நம்பகத்தன்மையுடன் உண்மைக்கு நெருக்கமாக இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை. இயக்குனரும் ஒட்டுமொத்த பட குழுவும் மிக சிறப்பான ஒரு படத்தை தந்துள்ளனர் என அஸ்வின் கூறியுள்ளார்.

Read Previous

தினமும் ரூ.50 சேமித்தால் போதும்..!! ரூ.35 லட்சம் தரும் போஸ்ட் ஆபீஸின் அசத்தலான சேமிப்பு திட்டம்..!!

Read Next

கறி குழம்பை மிஞ்சும் சுவையில் அருமையான வெஜ் கறி குழம்பு ரெசிபி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular