லப்பர் பந்து படத்தில் நடித்த நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?..

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாதிக்கா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லப்பர் பந்து திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளி பதிவு செய்துள்ளார்.

220 தியேட்டர்களில் ரிலீசான லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் ஒன்று என பெயர் வாங்கியுள்ளது. படம் ரிலீஸ் ஆன நாள் முதல் லப்பர் பந்து திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சுவாரஸ்யமான கிரிக்கெட் காட்சிகள், குடும்ப சண்டை என முதல் பாதி அட்டகாசமாக உள்ளது. இரண்டாவது பாதியும் சிறப்பாக உள்ளது. லப்பர் பந்து திரைப்படம் 10 நாட்களில் உலக அளவில் 17 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் நடித்த 70 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.

அடுத்ததாக முக்கிய ரோலில் நடித்திருந்த அட்டக்கத்தி தினேஷ் இந்த திரைப்படத்திற்காக 40 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். ஹரிஷ் கல்யாணின் நண்பனாக காத்தாடி கதாபாத்திரத்தில் நடித்த பால சரவணனுக்கும், கருப்பையா கதாபாத்திரத்தில் நடித்த காளி வெங்கட்டுக்கும் 15 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சுவாசிக்கா யசோதா மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு 20 லட்சங்கள் வரை சம்பளம் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Read Previous

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!! கல்வி தகுதி வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்..!!

Read Next

பசங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular