
பரமத்திவேலூர் தாலூக்கா லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில் பரமத்தி வட்டார அளவிலான சுகாதார திருவிழா (Block Health Mela) மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. கே. பி சின்ராஜ் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.