
- புதுச்சேரி | லாரி ஓட்டுனர்களை கதறவிட்ட மர்ம கும்பல்! ஒரே சமயத்தில் சிக்கிய 13 லாரிகள்!
கள்ளச் சந்தையில் டீசல் கடத்தி வந்து லாரிகளுக்கு விநியோகம் செய்த நபர் கைது.கொளத்தூர்: மாதவரம், மஞ்சம்பாக்கம் ஏரிக்கரை சாலை அருகே உள்ள கள்ளச் சந்தையில் டீசல் கடத்தி வந்து லாரிகளுக்கு விநியோகம் செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் நேற்று இரவு, துணை தலைமை காவலர் ராஜேஷ்குமார் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 13 லாரிகள் இருந்தன. அதில், ஒரு லாரியில் மட்டும் பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டிருப்பது போல் டீசல் போடும் குழாய் பொருத்தப்பட்டு, அந்த லாரியில் இருந்த மற்ற லாரிகளுக்கு டீசல் சப்ளை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது..
இது தொடர்பாக, அருகில் இருந்த நாமக்கல்லை சேர்ந்த தேவராஜ் என்பரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பாண்டிச்சேரியில் இருந்து டீசல் கடத்தி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் தேவராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.