
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கீழ் குப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 34), லாரி டிரை வர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் வழியாக கோவைக்கு பார்சல் ஏற்றிக்கொண்டு லாரியில் சென்று கொண்டிருந்தார். நேற்று அதிகாலை சீலநாயக்கன்பட்டி பைபாஸ் தனியார் பள்ளி அருகே லாரியை நிறுத்தி விட்டு அவர் தூங்கி விட்ட தாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த சிலர் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.