
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், ராமசாமிபுரம் புன்னைவனம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் வெள்ளைத்துரை (36), இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கும் தனியார் சிமெண்ட் கம்பெனியின் ஒப்பந்த லாரியில் டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கு இதயம் சம்பந்தமான நோய்க்காக பாண்டிசேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி அருகே இருக்கும் இலத்தூரில் உள்ள
தனியார் சிமெண்ட் கம்பெனிக்கு சொந்தமான குடோனில் சிமெண்ட் மூட்டகளை இறக்கிவிட்டு திரும்ப ஆர். ஆர். நகர் வந்தவர் வெம்பக்கோட்டை அருகே காட்டுப் பகுதியில் இறந்த நிலையில் டிரைவரின் உடலை வெம்பக்கோட்டை போலீசார் கைபற்றியுள்ளனர். அவர் ஓட்டி வந்த லாரி அப்பகுதியில் நின்றிருந்தது. இந்த சம்பவம் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.