சென்னை ராமாபுரத்தில் பெண் என்ஜினியர் உட்பட மூன்று பேரிடம் நூதன முறையில் இரண்டு லட்ச ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மின்வாரியத்தில் இருந்து பேசுவதாகவும், கிரெடிட் கார்டுக்கு ரிவார்டு கிடைத்து இருப்பதாகவும், வேலைவாய்ப்பு இருப்பதாகவும் கூறி மூன்று பேர் செல்போனுக்கு லிங்கை மர்மநபர்கள் அனுப்பியுள்ளனர். அந்த லிங்கை சம்பந்தப்பட்ட நபர்கள் தொட்டதும் அவர்கள் அக்கவுண்டில் இருந்து பணத்தை சுருட்டியுள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.