‘லியோ’ ஃபர்ஸ்ட் ஷோ.. தியேட்டரிலே திருமண நிச்சயதார்த்ததை முடித்த ஜோடி..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி தற்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் லியோ படம் ரிலீஸ் ஆனது.

பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி போடப்பட்டுள்ளது. கேரளாவில் 3.50க்கே லியோ படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் எல்சியூவில் இணைந்துள்ளது. ஆனால், காலையில் இருந்தே தியேட்டர்களில் கச்சேரியை ஆரம்பித்துள்ளனர் தளபதி ரசிகர்கள். இதுவரை லியோ திரைப்படம் குறித்து எந்தவொரு நெகடிவ் விமர்சனங்களும் வரவில்லை.

ரசிகர்கள் மட்டுமின்றி காலையிலிருந்து பிரபலங்கள் பலரும் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

அதாவது லியோ படத்தின் முதல் நாள், முதல் காட்சியின் போது திரையரங்கில் வைத்து தனது காதலியை நிச்சயம் செய்து கரம் பிடித்துள்ளார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அனைவரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Read Previous

உங்கள் வெள்ளை முடி கருப்பாக வேண்டுமா?.. இதை செய்யுங்க போதும்..!!

Read Next

ரூ.27,312 சம்பள உயர்வை பெறும் அரசு ஊழியர்கள் – ஜாக்பாட் அறிவிப்பு!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular