லேடி சூப்பர் ஸ்டார்” பட்டம்..!! அவமானமாக இருக்கு.. கொந்தளித்த நடிகை..!!

மலையாளத் திரைப்பட உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் மலையாளத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாகவும் திறமையான நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

வயது 45 ஆகியும் கூட இன்னும் அவரது மார்க்கெட்டும் மவுசும் குறையவே இல்லை. பார்ப்பதற்கு இளமை தோற்றத்தில் அழகாக அப்படியே இருக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றார். இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக பெரும் அடையாளத்தை கொடுத்தது.

அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சுவாரியர் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து கவனத்தை செலுத்தி வருகிறார். இவரது நடிப்பிற்காகவே ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் மஞ்சு வாரியரை லேடி சூப்பர்ஸ்டார் என மலையாள மீடியாக்களில் குறிப்பிடுவது வழக்கம். அதை பற்றி பேசிய அவர் “என்னை லேடி சூப்பர்ஸ்டார் என சிலர் குறிப்பிடுகிறார்கள். அது தேவையில்லாத விவாதத்தை ஏற்படுத்துகிறது. எது எனக்கு அவமானத்தை தான் கொண்டு வருகிறது. அந்த பட்டம் எனக்கு வேண்டாம், என் ரசிகர்களின் அன்பு மட்டுமே போதும்” என மஞ்சு வாரியர் என கூறியுள்ளார்.

Read Previous

புதிய நண்பருடன் கட்டியணைத்து போஸ் கொடுத்த அஞ்சலி..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

Read Next

Paris Olympics 2024: வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம்..!! இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular