“லோகேஷ் கனகராஜை பிடிக்காது, அவருக்கு பணம் சம்பாதிப்பது தான் நோக்கம்” பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!!

கோலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வந்தவர் மாணிக்கம் நாராயணன். இவர் செவந்த் சேனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் “கூலி”, “மாண்புமிகு மாணவன்”, “வேட்டையாடு விளையாடு”, “இந்திரலோகத்தில் நா அழகப்பன்” போன்ற பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

தற்பொழுது திரைத்துறையில் இருந்து ஒதுங்கி உள்ளார் மாணிக்கம் நாராயணன். இது போன்ற நிலையில் சமீபத்தில் youtube சேனலுக்கு பேட்டியளித்துள்ள மாணிக்கம் நாராயணன் திரை பிரபலங்கள் குறித்து தொடர்ந்து பல சர்சையான  கருத்துகளை பேசி வருகின்றார். “இந்திரலோகத்தில் நா அழகப்பன்” படத்தால் அனைத்து பணத்தையும் இழந்துவிட்டேன். அஜித் என்னிடம் பணம் வாங்கிவிட்டு இன்றுவரை திருப்பி தரவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் இதே இளையராஜா குறித்து பேசிய மாணிக்கம் நாராயணன் இளையராஜாவை அனைவரும் திமிர் பிடித்தவர் என்று கூறுகிறார்கள். ஆனால் இளையராஜாவிடம் திமிர் கொஞ்சம் கூட இல்லை .அவருடைய சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. இது குறித்து தெரியாதவர்கள் அவரை குறித்து பேசக்கூடாது என்று காட்டமாக பேசி உள்ளார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசிய மாணிக்கம் நாராயணன் லோகேஷ் கனகராஜ் இயக்குனரா இல்லை நடிகரா என்பது தெரியவில்லை. ஆனால் எனக்கு அவரை பிடிக்காது. அவருடைய படங்களில் மட்டுமே வன்முறை உள்ளது .வைலன்ஸ் வாழ்க்கை கிடையாது. பணம் சம்பாதிப்பதற்காக லோகேஷ் கனகராஜ் இப்படி எல்லாம் பண்ண கூடாது என்று கூறியிருந்தார், இவ்வாறு திரைப்பிரபலங்கள் குறித்து தொடர்ந்து சார்சையான கருத்தை தெரிவித்து வருகின்றார்.

Read Previous

மேடையில் திடீரென நடிகர் பாலகிருஷ்ணா செய்த காரியம்.! பதறிபோன நடிகை அஞ்சலி.! !வைரல் வீடியோ..!!

Read Next

சென்னையில் மீண்டும் கொடூரம்..!! இரண்டு வயது குழந்தையை கடித்து குதிரையே தெரு நாய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular