நொடிப் பொழுதில் கடன்களை வழங்குவதாக கூறும் பல மொபைல் ஆப்களை பார்த்திருப்போம். இது போன்ற செயலிகளை நம்பக்கூடாது எனவும், பயனாளர்களின் நிதி தகவல்கள் தவறாக பயன்படுத்தலாம் எனவும் அரசாங்கம் தொடர்ந்து எச்சரிக்கை எடுத்து வருகிறது. மேலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒரே வாரத்தில் 134 போலி ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதாக கூகுள் அறிவித்திருந்தது. எனவே மக்கள் இது போன்ற போலி ஆப்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.