நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கடந்த 2017-ஆம் ஆண்டு ரிலீசான விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு விக்ரம் வேதா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி, வரலட்சுமி, ஜான்விஜய் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த 2022-ஆம் ஆண்டு வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் ஹீரோவாக நடித்துள்ளார்.
வலிமை திரைப்படத்தில் சிரத்தா ஸ்ரீநாத் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது சிரத்தா ஸ்ரீநாத் கன்னட திரை உலகில் உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் பெங்களூரில் சட்டம் பயின்றார். பின்னர் ஒரு நிறுவனத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்தார். ஆனால் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக வழக்கறிஞர் பதவியை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் சிரத்தா ஸ்ரீநாத் அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.
View this post on Instagram