
வங்க தேசத்தில் உள்ள இந்து மத கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டு கோவிலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் அவர்களது மத வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடக்கும் சம்பவம் அதிகரித்து கொண்டே வருகின்றது. அந்த வகையில் வங்காள தேசத்தில் உள்ள பிரம்மன்பரியா மாவட்டத்தில் நைமத்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது.
அந்த கிராமத்தில் துங்கை கோவில் என்னும் இந்து மத வழிபாட்டு தளம் ஒன்று உள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று இந்த கோவிலுக்கு வந்த ஒரு நபர் கோவிலின் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறார். அத்துடன் அங்கிருந்த கடவுள் சிலையை அடித்து நொறுக்கி இருக்கிறார். அதன் பின் அங்கிருந்து அவர் தப்பி ஓடி உள்ளார்.
நிலையில் இது குறித்த அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் தப்பி ஓடியய நபரை கைது செய்திருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது கலில் மியா என்ற நபர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அவர் எதற்காக இப்படி தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீசார் அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.