வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் அதிகரிப்பு..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

சில வங்கிகள் சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பு  தொகையை உயர்த்தி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்பு தொகையை உயர்த்தி வங்கிகள் அறிவித்துள்ளன. அதன்படி, ஸ்டேட் பேங்க் வங்கி கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்பாக ரூ.3,000 வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தற்போது ரூ.5,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி குறைந்தபட்ச கையிருப்பை ரூ.1,000ல் இருந்து ரூ.3,500ஆகவும், கனரா வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.1000ல் இருந்து, ரூ.2,500 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதனால் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கி கணக்கை தொடரலாமா, இல்லை கணக்கை முடித்துக் கொள்ளலாமா என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Read Previous

உன் ஜாதகம்.. உன் கையில் தான் இருக்கிறது..!! உங்களுடைய ஜாதகத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பாக படிங்க..!!

Read Next

சோகம்.. கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..!! 20 பேர் படுகாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular