வங்கிகளில் பிக்சட் டெபாசிட்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படும் எனபது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வட்டி:
தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பு நேபாது இன்றியமையாத ஒன்றாகியுள்ளது. எனவே அனைவரும் பல்வேறு முறைகளில் தங்களது சேமிப்பினை மேம்படுத்தி வருகின்றனர். இதில் பிக்சட் டெபாசிட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. 3 ஆண்டு கால பிக்சட் டெபாசிட்களுக்கு இந்தியாவின் 5 முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் என்ன என்பது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
HDFC, ஐசிஐசிஐ மற்றும் கோடக் மஹிந்திரா பேங்க் 3 ஆண்டு கால பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 7 சதவீத வட்டி வழங்கி வருகிறது. அதனைத்தொடர்ந்து பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது 3 ஆண்டு கால FD யில் டெபாசிட் செய்பவர்களுக்கு 7.15 சதவீத வட்டியை வழங்குகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 3 வருட FD திட்டத்திற்கு 6.75 சதவீத வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.