
கேரள மாநிலம் வயநாட்டில், கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் உண்டான வெள்ளப்பெருக்கின் காரணமாக, அங்கு கோர நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மண்ணில் புதைந்து, வாழ்வாதாரம் இழந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து , தற்போது கேரள அரசு வங்கிக்கடன் தள்ளுபடி குறித்து தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.
ஊழியர்களின் 5 நாள் ஊதியம்:
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரில் சிக்கி உயிரிழந்தோர், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தோர்களின் வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, கேரள மாநிலத்திற்கு சொந்தமான கேரள வங்கி , முதல்வர் திரு. பினராயி விஜயன் அறிவித்த பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளதையொட்டி, தற்போது அங்கு பணியாற்றி வரும் வங்கி ஊழியர்களின் 5 நாள் ஊதியத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.