வயநாடு நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடன் தள்ளுபடி:
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலச்சரிவில் 400 க்கும் மேற்பட்ட மக்கள் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்ததாகவும் மேலும் பல மக்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு நிலவரத்தைக் காண சமீபத்தில் வருகை தந்த பிரதமர் மோடி மக்களை சந்தித்து ஆறுதல் அளித்துள்ளார். இந்நிலையில் கேரளா வங்கி ஆனது வயநாடு நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அம்மாநில முதல்வர் திரு. பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.