வசனகர்த்தா மறைவிற்கு விஜயகாந்த் இரங்கல்..!!

தனது ஆஸ்தான வசனகர்த்தா வேலுமணி மறைவிற்கு நடிகர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்ததோடு, நிதியுதவியும் செய்துள்ளார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து கேள்விபட்ட அவரது ஆஸ்தான வசனகர்த்தா வேலுமணி மாரடைப்பால் நேற்று காலமானார். விஜயகாந்த் நடித்த தேவன், எங்கள் ஆசான், விருதகிரி போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். சினிமா மட்டுமல்லாமல் அரசியல் மேடைகளில் பேசுவது குறித்தும் விஜயகாந்த் அவரிடம் ஆலோசனை நடத்துவது உண்டு. இந்நிலையில் இவரது மறைவிற்கு விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு விஜயகாந்த் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

Read Previous

’24 மணி நேரமும் ஆவின் மையங்கள் செயல்படும்’..!!

Read Next

பிரபல கன்னட நடிகை லீலாவதி காலமானார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular