வசூல் வேட்டையில் அசத்திய லக்கி பாஸ்கர் : 11 நாட்கள் கலெக்சன் எவ்வளவு தெரியுமா..!!

லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியான 11 நாட்களில் ரூபாய் 96.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளன…

தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான் அவரது நடிப்பில் வெளியான சீதாராமன் திரைப்படம் சிறப்பான வரிவறிப்பை பெற்றது இது தொடர்ந்து சல்மான் நடிப்பில் உருவான திரைப்படம் லக்கி பாஸ்கர் திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது, இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்திரி நடித்துள்ளார், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார், தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, சாதாரண நபராக இருக்கும் நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறுவதை கதையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது இந்த நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் வசூல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது இப்படம் வெளியான 11 நாட்களில் ரூபாய்96.8 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது..!!

Read Previous

ஜெகன் மோகன் ரெட்டி நிலைதான் திமுகவுக்கு ஏற்படும் சாபமிட்ட சீமான்..!!

Read Next

தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உறுதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular