
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை வரை செய்து வருகிறது அந்த வகையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்க்கலாம்…
தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள வயல்களில் தண்ணீர் தேங்கினால் பயிர் சேதம் ஏற்படும் எனவே வடிகால்களை சீரமைப்பு செய்து பயிர்களை பாதுகாக்க வேண்டும் பசுமை குடி நிழல்வலைக் குடில் போன்ற உருவாக்கப்பட்ட சூழலில் பயிர் செய்துள்ள விவசாயிகள் பசுமை குடில் மற்றும் நிழல் வலைகுடிகளை பருவமழை காலத்தில் அதன் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைத்து கட்டுவதன் மூலம் சேதத்தை தடுக்கலாம், மேலும் பசுமை குடில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று புகாமல் பாதுகாக்கவும் கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்யும் அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்யவும் என தோட்டக்கலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..!!