வடசென்னையில் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1476 புதிய குடியிருப்புகள் அமைப்பதற்கான பணிகளை இம்மாதம் இறுதிக்குள் முதல்வர் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு தகவல்..!!

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1476 புதிய குடியிருப்புகள் அமைப்பதற்கான பணிகளை இம்மாதம் இறுதிக்குள் முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்…

முதலமைச்சரின் நல்வழி காட்டுதலின்படி இன்று இந்து சமய அறநிலை துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சிக்கு குழும தலைவருமான பி.கே சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும் போது, முதலமைச்சர அவர்கள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு அந்தத் திட்டத்தில் 218 பணியில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் சென்னை வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்று காலை முதல் ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக கொளத்தூரில் இருக்கின்ற வண்ண மீன்கள் விற்பனை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு என்று சுமார் 54 கோடி செலவில் 20 ஏக்கர் பரப்பளவில் 138 கடைகள் கட்டுமான பணியை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள், அந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்று ஆய்வினை மேற்கொண்டோம், அதைத்தொடர்ந்து வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயனாவரம், யுனைடெட் காலணியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலகத்தை பார்வையிட்டு அந்த நூலகத்தினை மேம்படுத்துவதற்கான ஆய்வினை மேற்கொண்டோம், அதை தொடர்ந்து வடசென்னையில் சாலையோரம் மற்றும் கால்வாய் ஓரம் வசிக்கின்ற மக்களுக்கு பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கின்ற மக்களுக்கும் அவர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக இந்த இடத்தில் கூட்டுறவு பண்டகச்சாலை என்ற பெயரில் இந்த இடத்தில் சுமார் 776 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம், அதேபோல் வால்டாக்ஸ் ரோடு வாட்டர் பேசன் சாலை என்று சொல்லப்படுகின்ற தண்ணீர் தொட்டி தெருவில் 700 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை என்று மொத்தமாக 1476 குடியிருப்புகளை கட்டமைக்கின்ற பணிகளை இந்த மாத இறுதியில் முதல்வர் அவர்களின் பொற்கரங்களால் இந்த கட்டுமான பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார்கள், இந்த கட்டுமான பணி என்பது திட்டமிட்ட அடுத்த ஆண்டு 2025 டிசம்பர் மாதத்திற்குள் மக்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்..!!

Read Previous

நீலகிரி அருகே விதி மீறலில் ஈடுபட்ட 2 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை..!!

Read Next

மகிழ்ச்சி : 8 இடங்களில் மகளிர்க்கு பிரத்தியேக உடற்பயிற்சி கூடம் அமைக்கிறது சென்னை மாநகராட்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular