வடபழனியில் அறநிலை துறை சார்பில் கந்த சஷ்டி கவச விழா : 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர்..!!

சென்னை: கந்த சஷ்டி திருநாளை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கந்த சஷ்டி பாடலை பாடி சிறப்பு பூஜை செய்துள்ளனர்..

தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று சஷ்டியாகும் அதிலும் குறிப்பாக ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உரிய மகா கந்த சஷ்டியாக கருதப்படுகிறது இதன்படி முருகன் கோவில்களில் கடந்த இரண்டாம் தேதி கந்த சஷ்டி திருவிழா சிறப்பு பூஜை உடன் தொடங்கியது, முருகப்பெருமாள் சூரனை வதம் செய்த திருத்தலமான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா ஆறு நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது இன்றைய தினம் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்காரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர், இதற்கிடையில் சென்னையில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக விளங்கும் வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது, திருவிழாவின் ஒரு பகுதியாக வடபழனி ஆண்டவர் கோவில் இந்து சமய அறநிலை துறை சார்பில் கந்தசஷ்டி கவச பாராயணம் நடைபெற்றது, இதில் சென்னை கபாலீஸ்வரர் கோவில் கல்லூரி மாணவிகள் 50 பேர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் பள்ளி மாணவிகள் 69 பேர் என மொத்தம் 119 மாணவிகள் கலந்து கொண்டு கந்தசஷ்டி கவச பாடல்களை ஒருசேர பாடி அசத்தியுள்ளனர்..!!

Read Previous

தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு தொடர் கனமழை..!! இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!!

Read Next

கர்ப்பிணி பெண்களே..!! மத்திய அரசு உங்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை பற்றி தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular