
வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஞாயிறன்று ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். மேலும், இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு பாலமும் இடிந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். மேலும், டெல்லி உள்பட பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.