வட தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பெற சிறப்பு திட்டங்கள் தேவை..!! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

வட தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் தேவை என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பது “தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் 99.17%  மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட பாண்டி தேர்ச்சி விகிதம் 0.24% அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உயர்கல்வி சிறப்பாக அமையவும் வாழ்த்துகின்றேன்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணை தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெறவும் வாழ்த்துகின்றேன். கடந்த காலங்களை போலவும் நடப்பாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்  11ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதங்களிலும் வட மாவட்டங்கள் தான் கடைசி இடங்களை பிடித்துள்ளது. கடைசி 10 இடங்களை பிடித்த வேலூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய அனைத்துமே வடக்கு மற்றும் காவேரி பாசன மாவட்டங்களாகும்.

அதேபோல் கடைசி 15 இடங்களை பிடித்தவற்றில் 13 மாவட்டங்கள் வடக்கு மற்றும் காவேரி பாசனம் மாவட்டங்களாகும். 35 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது. அதற்காக வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தை கைவிட்டு வட மாவட்டம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அப்பகுதிகளில் கல்வி வளர்ச்சி அடைய சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”, என அவர் கூறியுள்ளார்.

Read Previous

சவுக்கு சங்கருக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!! கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு..!!

Read Next

உங்கள் ராசி சனி பகவானுக்கு பிடித்த ராசியா..? தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular