• September 24, 2023

வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக மின்வேலிகள் அமைப்பு தொடர்பாக புதிய அறிவிப்பு..!!

விவசாய நிலங்களில் மின் வேலிகள் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. சூரிய சக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயம் என அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் படி, காப்புக்காட்டின் வனப்பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் மின்வேலி அமைத்தவர்கள் பதிவு செய்வது கட்டாயம். ஏற்கனவே மின்வேலி அமைத்துள்ளவர்கள் 60 நாட்களுக்குள் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதாவது, மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது, ஏற்கனவே அமைத்த மின் வேலிகளை பதிவு செய்வது கட்டாயம்.

விதிகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் பதிவு சான்றிதழை பெற விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே மின்வேலி அமைத்தவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மின்வேலிகளை அமைக்கும் நிறுவனங்கள் BIS தர நிலைகளுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டிருக்க வேண்டும்.

மின்வேலி உள்ள இடத்தை மாவட்ட வன அலுவலர், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். மின்வேலிகளில் புதிய விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என அதிகாரிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. வனவிலங்குகளை மின்விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கு தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

Read Previous

7 முக்கிய ரயில்களில் இந்த வகுப்பு பெட்டிகள் குறைப்பு..!அதிர்ச்சியில் பயணிகள்..!!

Read Next

தமிழக போக்குவரத்து துறை..!புதிய பேருந்து வாங்க அரசு முடிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular