வயநாடு கேரளா இயற்கை சீற்றத்தால் மறைந்தோர்க்கு இதய அஞ்சலி 🙏❤️
தேக்கு மர உத்திரங்கள் எங்கே ?
தேகம் வருத்தி சம்பாதித்த தங்கம் எங்கே?
வைரம் எங்கே?
வைடூரியம் எங்கே?
வாரிசு வாரிசென
கொஞ்சி மகிழ்ந்த
வாரிசுகள் எங்கே?
கட்டிய மனைவி எங்கே?
சண்டைப்போட்ட அண்டை வீட்டார் எங்கே?
வயல்வெளி எங்கே?
வசீகர புல்வெளி எங்கே?
வானுயர்ந்த மரங்கள் எங்கே?
கோயில் எங்கே?
மசூதி எங்கே ?
தேவாலயங்கள் எங்கே?
கல்விக்கூடங்கள் எங்கே?
பங்களாக்கள் எங்கே?
குடிசைகளும் எங்கே?
மயானங்கள் தான் எங்கே?
எல்லாம் போனது
ஓர் நொடியில்
இது தான் வாழ்வென
நாம் உணர்வதெப்போது ???