
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி தெரிவித்துள்ளார்.
நிவாரணம்:
கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 3 கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. அதில் தற்போது வரை 410 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் அங்கு மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மக்கள் இடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி தெரிவித்துள்ளார். 60% உடல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ரூ.75,000, 40-50% உடல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ரூ.50,000, படு காயமடைந்தவர்களுக்கு கூடுதலாக ரூ.50,000, வீடுகளை இழந்து உறவினர் வீடுகளில் உள்ளவர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.