வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்தோருக்கு பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜுலை 29ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாற்று இடங்களில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.