கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இரவு பகலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக திரை உலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் இந்த சோக நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் சிலர் நிதி உதவியும் செய்துள்ளனர். விக்ரம் 20 லட்சம், சூர்யா கார்த்தி ஜோதிகா 50 லட்சம் என கேரள மாநிலத்திற்கு நிதி அளித்துள்ள நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து 20 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’வயநாட்டில் ஏற்பட்ட சோகமான நிலச்சரிவை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களது இரங்கல் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். நிலச்சரிவால் ஏற்பட்ட சீரழிவு, இழப்புகள் நெஞ்சை பிசைகின்றன. இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.
ஒற்றுமையின் அடையாளமாக எங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, மறு கட்டமைப்பு செயல்பாட்டில் உதவ, கேரள மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை தருகிறோம்.
நமது அரசாங்கம், தன்னார்வ தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகள் ஒருங்கிணைந்து மீட்பு பணியை செய்து வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram