வயிறு உப்புசத்தை குறைக்கும் இஞ்சி, சீரக டீ- இரவில் குடிக்கலாமா?..

உடலில் ஏற்படும் ஏகப்பட்ட நோய்களுக்கு நமது சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே வைத்தியம் செய்யலாம்.

இதன்படி, சமையலறையில் இருக்கும்  சீரகம்,  இஞ்சி ஆகிய இரண்டையும் தேநீரில் கலந்து பருகும் பொழுது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை கணிசமாக குறைய ஆரம்பிக்கும்.

மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகின்றது.

இது போன்று வேறு என்னென்ன நன்மைகளை சீரகம், இஞ்சி தேநீர் வழங்குகின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தேநீர்

இஞ்சி, சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்:

1. இஞ்சி, சீரகத்தை சேர்த்து தயாரிக்கப்படும் தேநீரை குடிப்பதால் உடலின் வளர்சிதை இயற்கையாக ஊக்குவிக்கப்படும். ஏனெனின் சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. அத்துடன் செரிமானத்திற்கு தேவையான எண்சைம்களையும் துண்டுகின்றது.

2. இஞ்சி, தெர்மோஜெனிசிஸை அதிகரிக்கும் வேலையை செய்கின்றது உடலில் இருக்கும் சூட்டை தணித்து தெர்மோஜெனிசிஸ் என்று அழைக்கப்படும் உட்பொருட்கள் ஒன்றிணைத்து உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். உடலில் இருக்கும் கலோரிகளையும் நல்ல முறையில் எரிக்கச் செய்கின்றது.

3.இஞ்சி, சீரகம் இரண்டையும் கலந்து தேநீராக குடிக்கும் பொழுது செரிமானத்திற்கு தேவையான எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன. இதிலிருக்கும் இஞ்சி வயிற்று இதமளித்து செரிமான எண்சைம்களை சுரக்கச் செய்கின்றது. அத்துடன் தேநீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை இலகுப்படுத்துகின்றது.

4. இஞ்சியில் பசியை கட்டுப்படுத்தும் குணங்கள் உள்ளன. இதனை தினமும் எடுத்து கொள்ளும் பொழுது உங்களின் பசி ஒரு கட்டுக்குள் இருக்கும். இஞ்சி-சீரக தேநீரை பருகுவதால் கலோரிகள் குறைக்கப்படுகின்றன.

5. சீரகம் – இஞ்சி தேநீரில் இயற்கையான முறையில் சிறுநீர் பிரிப்பு அதிகமாகின்றது. அத்துடன் நீரை தக்க வைக்கவும் உதவியாக இருக்கின்றது. சிலர் வயிற்றில் உப்புசம் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்கள். அப்படியானவர்கள் சீரகம், இஞ்சி கலந்த நீரை அருந்தலாம். இது உங்களுக்கு தேவையான நிவாரணத்தை நிலையாக வழங்கும். தொப்பை பிரச்சினையுள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.

Read Previous

மூத்த குடிமக்கள் FD திட்டத்தில் அதிக லாபம் தரும் வங்கிகளின் பட்டியல்..!! இதோ உங்களுக்காக..!!

Read Next

இன்னைக்கு சிக்கன் கிரேவி இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!! செம்ம டேஸ்டா இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular