மூன்று வேளையும் சாதம் சாப்பிடுவதால் உடல் பருமன், தொப்பை போன்றவை ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகம் அரிசி சோறு சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது குறித்து அறிவோம்.
அதிகமாக அரிசி சோறு சாப்பிடுவது கல்லீரல் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும்.
மதிய உணவுக்கு சாதம் இருப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் காலையிலும் இரவிலும் சோறு சாப்பிடக் கூடாது.
காலையில் சத்தான உணவை உண்ணுங்கள். காலையில் காய்கறிகள் அதிகம் சாப்பிடுவது நல்லது.
இரவு நேரத்தில் உடல் எந்த ஒரு கடினமான செயலிலும் ஈடுபடாததால் அரிசி செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுக்கும்.
இரவில் கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம்.
அரிசியில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உள்ளது. மேலும் இந்த கார்போஹைட்ரேட் அதிகபடியான உடல் சோர்வையும், தூக்கத்தையும் ஏற்படுத்தும்.
இவ்வாறாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்குவதால் தொப்பை போடுவது, உடல் பருமன் அதிகரிப்பது போன்றவை ஏற்படுவதுடன், உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்புகளும் ஏற்படுகிறது.
மதியம் நேரத்தில் வயிறு முட்டும் அளவு சாப்பிடாமல் அளவாக சோறு சாப்பிடுவது நல்லது.
எனவே தினமும் ஒரு வேளை மட்டும் அளவோடு சாதம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.