வயிற்று வலியால் நடந்த சோகம்; அதிமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை.!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை விஜயபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 50). இவர் விஜயபுரம் அதிமுக கிளை கழகப் பிரதிநிதியாய் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மூன்று மகன்கள் உள்ளனர். இதனிடையே கண்ணனுக்கு தீராத வயிற்று வலி பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் பெற்றும் குணமடையவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் மனம் உடைந்து காணப்பட்ட கண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர், மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read Previous

50 வயது நபர் குத்திக்கொலை; பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததால் 15 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.!!

Read Next

பெண்கள் நீராடி உடை மாற்றுவதை நேரலையில் பார்த்து ரசித்த காமுகன்..!! செல்போன் முழுதும் ஆபாச காட்சிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular