செரிமான மண்டலத்தில் தேங்கியுள்ள இந்த உணவு படிப்படியாக நச்சு கழிவுகளாக மாறி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் அஜீரணம் தலைவலி போன்ற உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்..
மோசமான வாழ்க்கை முறை மோசமான உணவுப் பழக்கம் தூக்கம் இன்மை அதிகப்படியான நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக அவை செரிமானத்தை தடுத்து வயிற்றை அசுத்தப்படுத்துகின்றன செரிமான மண்டலத்தில் தேங்கியுள்ள இந்த உணவு படிப்படியாக நச்சு கழிவுகளாக மாறி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் அஜீரணம் தலைவலி போன்ற உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆனால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சில பானங்களை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுகள் வெளியேறி வயிறு சுத்தமாகும் அந்த பானங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்..
வெதுவெதுப்பான தண்ணீர் ; காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் வயிறு சுத்தமாகும் இரவு முழுவதும் செரிமானம் காரணமாக சில கழிவுகள் வயிறு மற்றும் குடல் சுவர்களில் குவிந்து கிடைக்கின்றன.குளித்தபின் வெதுவெதுப்பான நீரை குடித்தால் சுவர்களில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறும் நீர் ரத்தத்தில் விரைவாக குவிந்து வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதேபோல் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இது வயிற்றை சுத்தப்படுத்துகிறது மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. மேலும் எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மார்பில் உள்ள வீக்கத்தை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
திரிபலா சூரணம் ; ஆயுர்வேதத்தின்படி திரிபலா மிகவும் முக்கியமானது ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் திரிபலா பொடி அல்லது மாத்திரை இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும் இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிற்றுப்போக்கு குணமாகும் சிறு குடலில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமாகும்..
சோம்பு தண்ணீர் ; சாப்பிட்ட பிறகு சோம்பு சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு உண்ட உணவை சீக்கிரம் செரிக்க செய்கிறது சோம்பு தண்ணீரும் இதே போன்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. செரிமானம் மேம்படும் சோம்பில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மார்பில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது இது பசியை குறைக்கிறது மற்றும் அதிகப்படியான உணவை தடுக்கிறது..
சிலருக்கு படுக்கைக்கு செல்வதற்கு முன் பால் அருந்தும் பழக்கம் இருக்கும் உங்களுக்கும் இந்த பழக்கம் இருந்தால் பாலில் சிறிதளவு நெய் கலந்து குடிக்கவும் இவ்வாறு செய்வதால் சிறுகுடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேறி சுத்தமாகும் இதனுடன் உடல் தளர்வு பெறுகிறது..!!