
- வரகு அதிரசம் செய்முறை
தேவையான பொருட்கள் :
* வரகு அரிசி கால் கிலோ
* பச்சரிசி கால் கிலோ
* வெல்லம் அரை கிலோ
* ஏலக்காய் தூள்1 டீஸ்பு+ன்
* சுக்கு பொடி கால் டீஸ்பூன்
செய்முறை :
வரகரிசி, பச்சரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி நிழலில் காய வைக்க வேண்டும்.
அவை லேசான ஈரத்தில் இருக்கும் போது இடித்து மாவாக்கிக் கொள்ள வேண்டும்.
வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு காய்ச்சி, அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் சுக்குபொடி சேர்த்து, பாகை மாவில் ஊற்றி நன்கு கிளற வேண்டும்.
கிளறியதை 24 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வட்ட வடிவமாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும் சுவையும் சத்தும் நிறைந்த அதிரசம் தயாராகி விட்டது.