
வங்கி விடுமுறை:
இந்தியாவில் வங்கிகள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பெரும்பாலும் வங்கி சார்ந்த பணிகள் வாயிலாகவே நடைபெற்று வருகிறது. தனியார் வங்கிகளும் அரசு வங்கிகளும் தங்களின் இணையதளம் வாயிலாக 24 மணி நேரமும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது.
அதனால் வாடிக்கையாளர்களும் வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தபடியே வங்கி பணிகளை முடித்து விடுகின்றனர். இருந்தாலும் சில நேரங்களில் முக்கிய பணிகளுக்கு நாம் வங்கிகளுக்கு சென்றுதான் ஆக வேண்டும். இத்தகைய சூழலில் நாம் வங்கி வேலை நாட்களை அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. வரவிருக்கும் பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் கீழ் வருமாறு.
- 5.02.2023 – ஞாயிற்றுக்கிழமை ( அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)
- 11.02.2023 – 2ம் சனிக்கிழமை விடுமுறை
- 12.0.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
- 18.02.2023 – மகா சிவராத்திரி (சில மாநிலங்களில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை)
- 19.02.2023 – ஞாயிறு விடுமுறை
- 20.02.2023 – மாநில தினம் (அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)
- 21.02.2023 – லூசார் (சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை)
- 25.02.2023 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை
- 26.01.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை