
வருமான வரிச் சட்டத்தின் கீழ் வங்கிகளில் சேமிப்பு கணக்கில் அதிகபட்ச தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரி:
இன்றைய கால கட்டத்தில் வங்கி என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் பணம் டெபாசிட் செய்யவும், தேவைப்படும் போது எடுக்கவும் பயன்படுகிறது. சேமிப்பு மற்றும் முதலீடு போன்றவையும் வங்கிகளில் செய்யப்படுகிறது. இந்திய முழுவதும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. சிறு பொருள் முதல் பெரிய பெரிய பொருட்கள் வரை எது வாங்கினாலும் QR கோடு மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு பணம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு.
அதை விட அதிக அளவில் பணம் வங்கி கணக்கில் வைத்திருந்தால் வருமான வரி செலுத்துவது கட்டாயமாகும். வருமான வரிச் சட்டம் 1962 இன் பிரிவு 114 பி-இன் படி, அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் பெரிய பண டெபாசிட்டுகள் குறித்து வருமான வரித் துறைக்கு தெரிவிக்க வேண்டும். வருமான வரித்துறை உத்தரவுப்படி ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கில் ரூ. 10 லட்சம் வரை ரொக்கமாக டெபாசிட் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.