வர்மக்கலையால் சிக்கலில் சிக்கிய இந்தியன் 2 ..!! தடை கேட்ட வழக்கில் அதிரடி உத்தரவு..!!

உலகநாயகன் கமலஹாசனின் நடிப்பில் “இந்தியன் 2”  திரைப்படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இத்திரை  படத்தினை வெளியிடக்கூடாது என்று ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் சங்கரின் இயக்கத்தில், நடிகர் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் “இந்தியன் 2” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து படக்குழுவினை திரைப்படத்திற்கு என வெளியீட்டு வேலையிணை தீவிரமாய் செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையை சார்ந்த வர்மக்கலை தலைவர் ராஜேந்திரன் என்பவர் இத்திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரின் அந்த மனுவில் “இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடித்துள்ள இந்த இந்தியன்  திரைப்படத்தின் முதலாம் பாகத்தில் கமலஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து முத்திரை பயன்படுத்தப்பட்டது, மேலும் என்னிடம் ஆலோசித்து அந்த படத்தில் எனது பெயரும் பயன்படுத்தப்பட்டது, முதலாம் பாகத்தில் கமலஹாசன் பயன்படுத்தியுள்ள வர்ம கலை முத்திரை படங்கள் தற்போது வெளியாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது., ஆனால் இது குறித்து எங்களிடம் எந்த ஒரு ஆலோசனையும் கேட்கப்படவில்லை, எனவே இந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்றும், மேலும் இத்திரைப்படம் திரையரங்குகளில், ஓடிடி தலங்களிலும் வெளியிடக்கூடாது மேலும் இது திரைப்படத்திற்கு நிரந்தரமாக தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் எதிர்மறை ஆகிய தயாரிப்பாளர் சுரேஷ்கரன் இயக்குனர் சங்கர் நடிகர் கமலஹாசன் ஆகியோர் மீது ஆகியோர் மனு குறித்த ஆட்சேபணையை வழக்கறிஞர் மூலமாக பதில் அளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கு வருகின்ற ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read Previous

சென்னை கோயம்பேட்டில் மேற்கு வங்கத்தை சார்ந்த பயங்கரவாதி கைது!!

Read Next

சன்னி லியோன் பயங்கரவாத கேங் ஸ்டாராக நடித்துள்ள கொட்டேஷன் கேங்..!! திரைப்படத்தின் டிரைலர் இதோ உங்களுக்காக..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular