குளிர்காலத்தில் மற்றும் சில நேரங்களில் நமது பாதங்கள் வறண்டு காணப்படும் அவற்றின் வறண்ட தன்மையை போக்குவதற்கு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக அமையும்..
நம்மை அழகுப்படுத்த பலவிதமான முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த அழகுப்படுத்தும் முயற்சியில் முகத்துக்கு மற்றும் தலைமுடிக்கு கொடுக்கும் கவனத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. குளிர்காலத்தில் பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை வறண்டு போவது இதற்கான தீர்வை இப்போது பார்ப்போம். பாதங்களை கழுவியவுடன் காயவைத்து சிறிதளவு மாய்ஸ்சரைசர் தடவுங்கள் இதனால் கால் பாதங்கள் ஈரப்பதம் ஏற்படும் வறட்சியிலிருந்து பாதுகாக்கப்படும். விரல்களுக்கு இடையில் இதை தடவ வேண்டாம். இதை பாக்டீரியாக்கள் நுழைய அதிக வழிவகுக்கும். பாதங்கள் வறண்டு காணப்படும் போது பாதங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் போது வெடிப்புகள் ஏற்படலாம். இதை தடுக்க குளிக்கும் போது படிக கல்லை கொண்டு பாதங்களை உரசலாம். பாத அரிப்பிற்காக சொரிவதால் தோலில் வெடிப்பு ஏற்படும் வெடிப்பு நோய் தொற்றுக்கு வழிவகுக்கும் எண்ணெய் அல்லது கிரீம்களை தடவிக் கொண்டே இருப்பது அரிப்பை கட்டுப்படுத்தும்..!!