வாஷிங்டனில் நடந்த வறுமையை ஒழிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக ஐநா சபை கூட்டத்தில் உரையாற்றிய மாநிலங்கவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்..
ஐநா சபையின் 79வது பொது சபை கூட்டத்தை தொடர்ந்து பன்னிரெண்டு உறுப்பினர்கள் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபைக்கு சென்றுள்ளது, வரும் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு அமர்வுகள் நடைபெற்று வருகின்றன, இதில் ஐநா சபையின் சமூக மற்றும் பொருளாதாரத்திற்கான அறிக்கை குறித்து அமர்வில் பங்கேற்று இந்திய சார்பில் மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா உரையாற்றினார், அப்போது அவர் இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில் குறிப்பிட தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார், உலகமே ஒரே குடும்பம் தான் என்று கூறியவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறி தனது உரையை நிறைவு செய்துள்ளார்..!!




