வல்லாரை சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் ஞாபகம் நீளும்..!!

அன்றைய காலகட்டத்தில் முன்னோர்கள் பலரும் காலை உணவில் கீரைகளையே அதிகம் பயன்படுத்தி வந்தனர் ஆனால் இன்றைய தலைமுறையினர் கீரைகளை உணவில் பயன்படுத்துவது மிகவும் குறைவுதான், ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு மருத்துவமும் மகத்துவமும் உண்டு, ஆம் வல்லாரைக் கீரையின் மகத்துவம் வாழ்நாள் முழுவதும் பேசும் என்று முன்னோர்கள் சொல்வது உண்டு..

வாரம் ஒருமுறை வல்லாரை கீரையை உணவில் சேர்த்து வருவது அவ்வளவு நல்லது இது ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையின் வெயிலில் காய வைத்து பொடியாக்கிக்கொண்டு தினமும் அரை தேக்கரண்டியை பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடனும் சுறுசுறுப்பாகவும் திகழ்வார்கள், மேலும் இந்தக் கீரை அருகில் உள்ள காடுகளிலும் வாய்க்கால்களிலும் கிடைக்கும் இந்தக் கீரைகள் சந்தைகளிலும் தற்பொழுது விற்பனைக்கு வருகிறது, ஒருவேளை இந்தக் கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல் பயன்படுத்தலாம் ஆனால் கீரையில் உள்ள சத்துக்களைப் போல் இதில் இருப்பது குறைவு தான், முடிந்தவரை வல்லாரைக் கீரையை தங்களின் குழந்தைகளுக்கு தருவதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி வளமாக இருக்கும்..!!

Read Previous

பொன்னிற மேனியை தரும் பொன்னாங்கண்ணி..!!

Read Next

வாகனம் ஓட்டுவதால் வரும் முதுகு வலியை போக்க இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular