வளர்ப்பு மகளை 6 மாதமாக மிரட்டி சீரழித்த தந்தை..!! கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து நடந்த பயங்கரம்.!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முஜாபர்நகர் மாவட்டம், ஆழ்வார்பூர் கிராமம், பாவுர கலா பகுதியில் வசித்து வருபவர் சந்தர் பால்.  இவரின் மகன் ஜிதேந்திர வால்மீகி. இவர் அதே பகுதியை சார்ந்த கணவரை இழந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் .அந்த பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் முதல் கணவர் இறந்த காரணத்தால் பெண்மணி தனது இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜிதேந்திரவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளின் மீது காமப் பார்வையை திருப்பி கொடூரன் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

இதனை தனக்கு சாதகமாகக்கிக் கொண்ட கொடூரன் கடந்த ஆறு மாதங்களாக சிறுமியிடம் அத்துமீறலை தொடர்ந்துள்ளான். ஒரு கட்டத்தில் சிறுமி தனக்கு நேர்ந்த துயரம் குறித்து தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமையின் வளர்ப்பு தந்தையான ஜிவேந்திராவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Read Previous

ஆன்லைன் பந்தயத்தில் முதலீடு செய்து, ரூ.2 கோடி கடனாளியான மகன் அடித்தே கொலை..!! தந்தை அதிர்ச்சி செயல்.!!

Read Next

அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர்; பாலத்தில் இருந்து கீழே விழுந்து 2 இளைஞர்கள் மரணம்..!! அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular