வாகனத்தை பதிவு செய்ய 15 நாட்கள்தான் அவகாசம் இல்லையென்றால் உரிமம் ரத்து..!! தமிழக அரசு அதிரடி..!!

சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்து கழிவு நீரை எடுத்து செல்ல கழிவுநீர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கழிவுநீர் அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 பிரிவு 7-ன்படி எந்த ஒரு நபரையும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் உள்ளது. இதனை மீறுவோர்கள் மீது பிரிவு 9-ன் படி தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் வழிவகை உள்ளது. கழிவு நீர் எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் பதிவு புத்தகத்தில் வாகனத்தின் வகை  “கழிவு நீர் அகற்றும் வாகனம்” என பதியப்படி இருக்க வேண்டும்.

எனவே கழிவு நீர் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் பதிவு சான்றிதழில் “கழிவுநீர் அகற்றும் வாகனம்” என்று பதிவு செய்யப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அணுகி பதிவு புத்தகம் மற்றும் அனுமதி சீட்டினை “கழிவுநீர் அகற்றும் வாகனம்” என உரிய தகுதி சான்றுடன் 15 தினங்களுக்குள் பதிவு செய்து கொள்ள பிரிவு 86 மோட்டார் வாகன சட்டம் 1988 படி இதன் மூலம் அறிவுறுத்தப்படுகின்றது. என்றும் அவ்வாறு செய்ய செய்து கொள்ள தவறினால் அனுமதி சீட்டு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

Read Previous

திட்டங்களை நடைமுறைப்படுத்த இவர்களுக்கு கூடுதல் பொறுப்பு..!! அரசு அதிரடி உத்தரவு..!!

Read Next

விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு..!! ஜூன் 5 முதல் 14ஆம் தேதி வரை முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular