வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்..!!

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து முழு ஒத்துழைப்பு வழங்க மாவட்ட பார்வையாளர் வேண்டுகோள்…

இறுதி வாக்காளர் பட்டியல் செம்மையாக வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீலகிரியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் 2025 தொடர்பாக கடந்த மாதம் 29ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது, இதன்படி 3 தொகுதிகளிளும் 5 லட்சத்து 78 ஆயிரத்து 961 வாக்காளர்கள் உள்ளனர், அக்டோபர் 29ஆம் தேதி துவங்கி நவம்பர் 28-ம் தேதி வரை சுருக்கமுறை திருத்தம் நடக்கிறது, இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கம் முறை திருத்தம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் உதவி பதிவு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது, கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார், தமிழ்நாடு உப்பு கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் தலைமை வகித்து பேசியுள்ளார், இதில் அவர் பேசியது இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் செம்மையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது, இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றிற்கு ஆட்சேபனைகள் தெரிவிக்க கடைசி நாள் டிசம்பர் 24 ஆகும், அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது, இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது சதீஷ்குமார், ஆர்டிஓக்கள் சதீஷ் செந்தில்குமார் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலன் கலந்து கொண்டனர்..!!

Read Previous

விழுப்புரம் அருகே சுடுகாடு இல்லாததால் சாலையில் சடலத்தை வைத்து பொதுமக்கள் மறியல்..!!

Read Next

நீலகிரி அருகே விதி மீறலில் ஈடுபட்ட 2 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular