
தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பலரும் நான் வாக்கிங் செல்கிறேன் என்று கூற கேள்வி பட்டிருப்போம். இன்றைய காலகட்டத்தில் ஒரு பேஷனாக இந்த வாக்கிங் மாறி உள்ளது. இது நடந்து செல்வது மட்டுமல்ல இது ஒரு கார்டியோ பயிற்சியும் தான்.
தினசரி ஒரு 10 முதல் 20 நிமிடங்கள் நடந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் நடப்பதினால் உடலில் ஒட்டுமொத்த இயக்கங்களும் இதன் மூலம் சீராக அமையும். அதிலும் குறிப்பாக ரிவர்ஸ் வாக்கிங் எனப்படும் பின்னோக்கி நடக்கும் பயிற்சிகளை மேற்கொள்வதால் ஏராளமான நன்மைகளை நாம் உடலுக்கு கிடைக்கின்றது.
பின்னோக்கி நடப்பதால் கால் தசை வலிமையானதாக மாறுகின்றது. கால்களின் பின்புறம் உள்ள தசைநார்களின் வலிமை அதிகரிக்கின்றது. அதேபோல் பின்னோக்கி நடந்து செல்லும் பொழுது நமது நடை ஒரே மாதிரி சீராகவும், நிதானமாகவும் அமையும். மேலும் பின்னோக்கி நடக்கும் பொழுது சிறிது தூரமே நடந்தாலும் அதிக கலோரிகளை நம்மால் எரிக்க முடியும்.
மேலும் தொடர்ந்து ரிவர்ஸ் வாக்கிங் செய்வதால் கார்டியோ வாஸ்கூலர் ஆரோக்கியம் மட்டுமல்லாது சுவாச திறனின் ஆரோக்கியமும் மேம்படுகின்றது. சுவாசம் சம்பந்தமான அனைத்து வகையான பிரச்சனைகளும் சரியாகின்றது. நுரையீரல் பலப்படுகின்றது
தொடை மற்றும் கால் தசைகளின் நெகிழ்வுத் தன்மை அதிகரிப்பதால் கால் வலியும், இடுப்பு வலியும் குறையும். மூச்சு குழாயில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ரிவர்ஸ் வாக்கிங் எனப்படுகின்ற பின்னோக்கி நடக்கும் முறையை தினமும் கடைபிடிக்க வேண்டும் இதனால் இவர்களின் நுரையீரல் ஆரோக்கியமாய் மேம்படும்.