வாட்ஸ் அப் பயனர்களுக்கான சூப்பர் அப்டேட் – வீடியோ காலிலேயே ஆடியோவை ஷேர் செய்யலாம்..!!

வீடியோ காலில் இருக்கும் போதே நண்பர்களுடன் ஆடியோவை ஷேர் செய்யும்படியான சூப்பர் அப்டேட் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

வாட்ஸ் அப் அப்டேட்:

whatsapp நிறுவனம் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் வீடியோ கால் முறையை சற்று மேம்படுத்தும் வகையிலான ஏகப்பட்ட அப்டேட்டுகளையும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது வீடியோ காலில் இருக்கும் போதே பயனர்கள் ஏதேனும் ஆடியோவை நண்பர்களுடன் ஷேர் செய்து மகிழலாம்.

தற்போதைக்கு வாட்ஸ்அப் டெஸ்டர்களுக்கு மட்டுமே இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் அனைத்து பயனார்களும் வீடியோ காலில் இருக்கும் போதே ஆடியோவை ஷேர் செய்யும்படியான அப்டேட்டை பெற்று பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வீடியோ காலிலேயே புதிதாக ஆடியோவை இணைக்கும் படியான ஆப்ஷன்கள் வழங்கப்படும் எனவும், நண்பர்கள் குழுக்களாக இணைந்து ஆடியோவை கேட்டு பயனடையலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Read Previous

ரூ.7 முதலீட்டில் மாதம் ரூ.5000 பென்ஷன் பெறும் திட்டம் – முழு விவரம் இதோ..!!

Read Next

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular