
வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறு தேதியை படக்குழு தற்போது தகவல் வெளியாகியுள்ளது…!
நானே வருவேன் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் “வாத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த அறிவிப்பு கிடைத்துள்ளது .
வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக ப்ரோமோவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.