வாத நோயின் வரமாக திகழும் வாதநாராயணன் கீரை..!!

Oplus_131072

 

வாதநாராயணன் கீரையை காயவைத்துப் பொடியை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.

வாதநாராயணன் பொடியின் பயன்கள்:
வாத நோய்களைப் போக்கும், முடக்குவாத நோய்களை தீர்க்கும், வாயுத்தொல்லை தீரும், மூட்டுவலியைப் போக்கும்.

வாதநாராயணன் பொடியை எப்படி பயன்படுத்தலாம்?
வாதநாராயணன் கீரை பொடியை சுடுநீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

வாதநாராயணன் இலை பொடி, மூக்கிரட்டை வேர் பொடி, விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து குழைத்து மாதம் ஒரு முறை சாப்பிடலாம்.

முடக்குவாதம் தீர்வு

முடக்குவாதம் நோய் உள்ளவர்களுக்கு வாதநாராயணன் இலை பொடி நல்ல மருந்தாக திகழ்கிறது. இதற்கு வாதநாராயணன் பொடியை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்துக்கொள்ளவும். மென்மையான பருத்தி துணியை இதில் நனைத்து வலி இருக்கும் இடத்தில் தடவும். இது முடக்குவாதத்திற்கு சிறந்த தீர்வாக திகழ்கிறது.

பக்கவாதம்
பக்கவாதம் ஏற்படும் முன் மூளையில் சில அறிகுறிகள் ஏற்படும். இது போன்ற நேரங்களில் மருத்துவரை நாடுவது நல்லது. இதில் இருந்து வெளிவர வாதநாராயணன் கீரை உதவியாக இருக்கும். இதற்கு வாதநாராயணன் கீரையை நன்கு காயவைத்து, பொடி செய்து எடுத்துக்கொள்ளவும். இதனை தினமும் இரவு படுகைக்கு செல்லும் முன் நீரில் கலந்து குடித்து வரவும். இது போல் செய்து வர, பக்கவாதம் நீங்கும்.

வாத நீர் வெளியேறும்
மூட்டுகளில் தேங்கியிருக்கும் வாத நீரை வெளியேற்ற வாதநாராயணன் கீரை சிறந்து திகழ்கிறது. இதற்கு வாதநாராயணன் கீரையை துவையாலாக்கி சாப்பாட்டில் சேர்த்து வர வேண்டும். இது வாத நீரை மலம் வழியாக வெளியேற்றும். மேலும் மாதம் ஒரு முறை வாதநாராயணன் கீரை பொடியை விளக்கெண்ணெய் உடன் சாப்பிட்டு வரவும். இது வாத நீரை வெளியேற்ற சிறந்த வழி.

நரம்புத்தளர்ச்சி தீரும்

உங்களுக்கு நரம்புத்தளர்ச்சி இருந்தால், நரம்புத்தளர்ச்சி இருப்பவர்கள் வாதநாராயணன் கீரை பொடி தினமும் குடித்துவரலாம். இதற்கு வாதநாராயணன் கீரையை நன்கு குழப்பி, எடுத்துக்கொள்ளவும். இதனுடன், சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து அரைத்து சேர்த்துக் கொள்ளவும். மூட்டு வீக்கம், வாதம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.

வாத நாராயணன் பொடியை விளக்கெண்ணெயுடன் அல்லது சுடுநீரில் கலந்து பயன்படுத்தலாம். மூட்டு வலி, உடல் சோர்வு போன்ற வாத நோய்களால் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய இது உதவுகிறது. 5 கிராம் பொடியை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.

 

Read Previous

சிறுநீரகங்களுக்கு சேதம் விளைவிக்கும் தினசரி பழக்கங்கள்..!!

Read Next

சனிபகவானை கோபப்படுத்தும் செயல்கள்.. என்னென்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular